Useful Widgets

யாவும் அவள் தருவாள் ---- கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் - Kondavil Thillaiyampathy Sri Sivakami Amman - Jaffna
****** ஈழத்து தில்லையம்பதியாளின் இணையத்தள தரிசனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.**** ******

Monday, May 21, 2018

ஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2018 : நான்காம் திருவிழா

இன்று ஈழத்து தில்லையம்பதியிலே மகோற்சவத்தின் நான்காம்  நாள் திருவிழா. கடந்த 2017,  2016 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற நான்காம்  திருவிழா  காணொளிகளை   இங்கே காணலாம் .








Sunday, May 20, 2018

ஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2018 : மூன்றாம் திருவிழா

இன்று ஈழத்து தில்லையம்பதியிலே மகோற்சவத்தின் மூன்றாம் நாள் திருவிழா. கடந்த 2017,  2016 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற மூன்றாம் திருவிழா (அன்னச்சப்பறம் ) காணொளிகளை   இங்கே காணலாம் .






Friday, May 18, 2018

ஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2018 : கொடியேற்றத்திருவிழா

கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதியிலே அருளாட்சி புரிகின்ற அன்னை ஸ்ரீ சிவகாமி அம்பாளின் வைகாசி பெருவிழா இன்று  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக 12 தினங்கள் நடைபெற உள்ளது . இன்றைய கொடியேற்ற திருவிழாவின் ஒளிப்படங்களை இங்கே காணலாம்.



















Wednesday, May 16, 2018

ஈழத்து தில்லையம்பதியாளின் வசந்த வைகாசி மஹோற்ஷவ பெருவிழா - 2018

இலங்கை மண்ணின் தொன்மைசேர் கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதியிலே அருளாட்சி புரிகின்ற அன்னை ஸ்ரீ சிவகாமி அம்பாளின் வைகாசி பெருவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18.05.2018) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12 தினங்கள் நடைபெற திருவருள் பாலித்துள்ளது.

கிரியா கால விபரம் 
17.05.2018: வியாழக்கிழமை        :- சாந்திக்கிரியைகள்      - மாலை  06.00
18.05.2018: வெள்ளிக்கிழமை       :- கொடியேற்றம்              - முற்பகல் 10.00
20.05.2018: ஞாயிற்றுக்கிழமை   :- அன்னச்சப்பறம்            - இரவு   7.30
22.05.2018: செவ்வாய்க்கிழமை  :- பூச்சப்பறம்                      - இரவு   7.30
23.05.2018: புதன்கிழமை                :- வசந்த உற்சவம்           - இரவு   7.30
24.05.2018: வியாழக்கிழமை        :- கைலாச வாகனம்       - இரவு   7.30
27.05.2018: ஞாயிற்றுக்கிழமை   :- வேட்டைத்திருவிழா - மாலை 03.00
27.05.2018: ஞாயிற்றுக்கிழமை   :- சப்பறத்திருவிழா        -  இரவு  7.30
28.05.2018: திங்கட்கிழமை            :- தேர்த்திருவிழா           - முற்பகல் 10.00
29.05.2018: செவ்வாய்க்கிழமை  :- தீர்த்த உற்சவம்           - முற்பகல் 10.00
29.05.2018: செவ்வாய்க்கிழமை  :- கொடியிறக்கம்            - மாலை 06.00
30.05.2018: புதன்கிழமை                :- பூங்காவனம்                 - இரவு   7.30
31.05.2018: வியாழக்கிழமை        :- வைரவர் மடை           - இரவு   7.00

11.06.2018: திங்கட்கிழமை :- வைகாசி பொங்கல் விழா - அதிகாலை 04.00

தினசரி உற்சவம் 
காலை 8.30  மணிக்கு அபிஷேகம், முற்பகல் 9.30 மணிக்கு மூலஸ்தான பூஜை, முற்பகல் 10.00 மணிக்கு ஸ்தம்ப பூஜை, முற்பகல் 10.30 மணிக்கு  வசந்த மண்டப பூஜை, முற்பகல் 11.30 மணிக்கு அம்பாள் வீதி உலா வரும் காட்சி 

மாலை 5.00 மணிக்கு சாயரட்சைப் பூஜை , மாலை 5.30 மணிக்கு ஸ்தம்ப பூஜை, மாலை 6.30 மணிக்கு  வசந்த மண்டப பூஜை, இரவு 7.30 மணிக்கு அம்பாள் வீதி உலா வரும் காட்சி 


மஹோற்ஷவத்தை முன்னிட்டு தினமும் மகேஸ்வர பூஜை அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கும் வைபவமும் இடம்பெறும்.